தன்னைத்தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டார் யாழ். மாநகர சபை முதல்வர் - தன்னோடு தொடர்பு கொண்டவர்களை அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 24, 2021

தன்னைத்தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டார் யாழ். மாநகர சபை முதல்வர் - தன்னோடு தொடர்பு கொண்டவர்களை அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தன்னைத்தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளது.

குறித்த திருமண வைபத்தில் தானும் கலந்துகொண்டமையினால் தன்னைதானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் அறித்துள்ளார்.

அத்தோடு, பி.சி.ஆர் பரிசோதனையும் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த காலப்பகுதியில் தன்னோடு தொடர்பு கொண்டவர்கள் அவதானமாக இருக்குமாறு வி.மணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் காரணமாக இன்றையதினம் இடம்பெறவிருந்த மாநகர சபை அமர்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 20 ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோர், தனக்காக பி.சி.ஆர். முடிவு கிடைக்கும் வரையில் அவதானமாக இருக்குமாறும், தம்மை தனிப்படுத்தி கொள்ளுமாறும் முதல்வர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad