சிரியா மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய ரொக்கெட் குண்டுகள் தலைநகர் டமஸ்கஸின் தென் பகுதியில் விழுந்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஈரானுடன் தொடர்புபட்ட சொத்துகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
கோலன் குன்று பகுதியில் இருந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றதோடு பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டுவீழ்த்த முடிந்ததாக சிரிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகரின் புறநகர் பகுதி மீது ஒரு மாதத்திற்குள் இடம்பெறும் இரண்டாவது தாக்குதலாக இது உள்ளது.
இந்த செய்தி பற்றி கருத்து வெளியிடுவதை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது.
சிரியாவில் இஸ்ரேல் தனது இலக்குகளை கடந்த ஒர் ஆண்டில் விரிவுபடுத்தி உள்ளது. அங்கு ஈரான் பலம்பெற்றிருக்கும் ஈராக் எல்லையை ஒட்டிய தூர கிழக்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment