சீன தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

சீன தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்டுள்ளார்.

சீனாவில் தயாரான சினோபார்ம் தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்கள் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி பாகிஸ்தான் நாட்டுக்கு நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

அந்நாட்டில் 6.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. 

கடந்த 10ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதன்படி, முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

பாகிஸ்தானில் சினோபார்ம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை தவிர்த்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் கேன்சினோ பையோலாஜிக்ஸ் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

எனினும், பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசி போடும் பணி தொய்வடைந்தது.

இந்த நிலையில், சீனாவின் 2ஆவது கட்ட சினோபார்ம் தடுப்பூசிகன் ராவல்பிண்டி நகரில் உள்ள நூர் கான் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தது. 

இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் பெற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று (19) எடுத்து கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad