விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ௐல்ட்டன் தோட்டத் தொழிலாளர்கள் பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ௐல்ட்டன் தோட்டத் தொழிலாளர்கள் பிணையில் விடுதலை

ஓல்ட்டன் தோட்ட முகாமையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 தொழிலாளர்கள் உட்பட 22 பேர் கடும் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுதலை செயப்பட்டனர் .

குறித்த வழக்கு இன்று (10) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதவான் நிமேஷா பட்டபெந்திகே தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை, ஒரு லட்சம் ரூபாய் சரீரணையிலும் ஒவ்வொறு மாதமும் மாத இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் காலை 09 மணிமுதல் 11 மணி வரையில் நேரில் சென்று கையொப்பமிட வோண்டுமென கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்தார் .

தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணியில் ஓல்ட்டன் தோட்ட நிர்வாகத்திக்கும் தொழிலார்களும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கடந்த மாதம் 04 ஆம் திகதி முதல் நிர்வாகத்திற்கு எதிராக தொடந்து பணிப்பகிஷ்கரிபில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதி ஓல்ட்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை தாக்கப்பட்டமை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒல்ட்டன் தோட்டத்தை சேர்ந்த எட்டு பெண்கள், இரண்டு ஆண்களுமாக 10 பேர் கைது செய்யப்பட்டு அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, மேலும் 12 சந்தேக நபர்களை மஸ்கெலியா பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, நீதவான் சந்தேக நபர்கள் 22 பேரையும் கடும் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்ததுடன் குறித்த வழக்கினை மீண்டும் ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

வழக்கு விசாரணையில் போது தொழிலாளர்கள் சார்பாக சிவில் அமைப்புகளின் சார்பிலும் தொழிற்சங்கங்களின் சார்பிலும் பலர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment