ரஷ்ய கோடீஸ்வரர் ஆண்ட்ரி மெல்னிச்சென்கோ தற்போது இலங்கையில் இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவர் இன்று கொழும்பு துறைமுக நகரத்திற்கும் விஜயம் செய்ய உள்ளார்.
மெல்னிச்சென்கோ தனது செல்வத்தை முக்கியமாக சுரங்க நடவடிக்கைகள் மற்றும் உர வணிகத்தின் மூலம் குவித்தார்.
மேலும் அவரது சொத்து மதிப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர் ஒரு உர நிறுவனமான யூரோசெம் மற்றும் நிலக்கரி சுரங்க நிறுவனமான SUEK இல் பங்குகளை வைத்திருக்கிறார்.
முதலீட்டு வாய்ப்புகளுக்காக கடந்த சில மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்த இரண்டாவது உயர்மட்ட நபர் இவர் ஆவார்.
No comments:
Post a Comment