தடுப்பு மருந்தில் பன்றி சம்பந்தமில்லை - இந்தோனேசியாவுக்கு 'அஸ்ட்ராசெனகா' நிறுவனம் பதில் - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

தடுப்பு மருந்தில் பன்றி சம்பந்தமில்லை - இந்தோனேசியாவுக்கு 'அஸ்ட்ராசெனகா' நிறுவனம் பதில்

அஸ்ட்ராசெனகா நிறுவனம் அதன் கொவிட்-19 தடுப்பு மருந்தில் பன்றி சம்பந்தப்பட்ட பொருள் ஏதும் இல்லை என முஸ்லிம் நாடான இந்தோனேசியாவிடம் உத்தரவாதம் அளித்துள்ளது.

'அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இஸ்லாமிய சமயத்திற்கெதிரானது. அதில் பன்றிக் கணையத்திலான டிரிப்சின் சேர்க்கப்பட்டுள்ளது' என இந்தோனேசியாவின் மிக உயரிய இஸ்லாமிய தலைவர்களின் இந்தோனேசியா உலமா சபை கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது.

இருப்பினும், வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு அது ஒப்புதல் வழங்கியது.

இதற்கிடையில் தடுப்பு மருந்து உற்பத்தியின் எல்லா நிலைகளிலும், பன்றி சம்பந்தப்பட்ட பொருளோ மற்ற விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருளோ கலக்கப்படுவதில்லை என அஸ்ட்ராசெனகாவின் இந்தோனேசிய பேச்சாளர் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment