பீதுறுதாலகால மலை காட்டுப் பகுதியில் தீ - ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

பீதுறுதாலகால மலை காட்டுப் பகுதியில் தீ - ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசம்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீதுறுதாலகல மலை காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது.

நேற்று (01) மாலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் வரையான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாராவது விஷமிகள்தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக நுவரெலியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியும் கிடைத்தமை குறிப்பிடதக்கது.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment