கொழும்பு துறைமுக மேற்கு முனையம் அதானியுடன் இணைந்து அபிவிருத்தி - அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

கொழும்பு துறைமுக மேற்கு முனையம் அதானியுடன் இணைந்து அபிவிருத்தி - அமைச்சரவை அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

35 வருடங்களில் அபிருத்தி செய்து நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு கூறியிருந்த நிலையில், இந்தியாவிடமிருந்து மாத்திரம் முதலீட்டாளருக்கான உடன்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டம் - மேற்கு கொள்கலன் முனையம் (WCT) அபிவிருத்தி செய்தல் மற்றும் நடவடிக்கைகள்

கொழும்பு தெற்கு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் (WCT) இந்திய அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தால் பெயரிடப்படும் தரப்பினர்கள் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அரச - தனியார் வர்த்தகமாக அபிவிருத்தி செய்வதற்கும், அது தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை மதிப்பீடு செய்வதற்காகவும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு மற்றும் கருத்திட்ட குழுவொன்றை நியமிப்பதற்கும், 2021 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு, நிர்மாணித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீளக்கையளிக்கும் ஒப்பந்தம் மற்றும் யோசனை விண்ணப்பங்கள் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஜப்பான் தூதுவராலயத்திற்கு சமர்ப்பித்து முதலீட்டாளர்களை குறித்துரைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கமைய, Adani Ports and Special Economic Zone Limited (APSEZ Consortium) சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஜப்பான் அரசாங்கத்தால் எந்தவொரு முதலீட்டாளரும் குறித்துரைக்கப்படவில்லை. இருதரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய Adani Ports and special economic Zone Limited (APSEZ Consortium) மற்றும் உள்ளுர் பிரதிநிதியான John Keels Holdings PLC (APSEZ Consortium) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து அரச – தனியார் வர்த்தகமாக 35 வருடங்கள் அபிவிருத்தி செய்து, நடைமுறைப்படுத்தி, மீளக்கையளித்தல் அடிப்படையில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment