ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆபத்து அதிகம் உள்ள கடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் இன்று (20) கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7.0 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இஷினோமாகியில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நில நடுக்கம் காரணமாக டோக்கியோவில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். 

நில நடுக்கத்தைத் தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஆபத்து அதிகம் உள்ள பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad