பஹ்ரைன் துணை மன்னருடன், இலங்கை பிரதமர் தொலைபேசியில் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

பஹ்ரைன் துணை மன்னருடன், இலங்கை பிரதமர் தொலைபேசியில் கலந்துரையாடல்

(நா.தனுஜா)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பஹ்ரைனின் துணை மன்னருக்கும் இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருப்பதுடன் இதன்போது இரு தரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது பஹ்ரைனின் துணை மன்னர் சல்மான் பின் ஹமட் அல் கலிஃபாவுடனான தொலைபேசி உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் எதிர்காலத்தில் இரு தரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தக்கூடிய துறைகள் பற்றிப் பேசினோம்.

அத்தோடு நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் நிலைபேறான சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக முன்னெடுத்திருந்த முயற்சிகளை பஹ்ரைனின் துணை மன்னர் நினைவுகூர்ந்ததுடன் அவற்றுக்குத் தனது பாராட்டையும் தெரிவித்தார் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment