கெகிராவை பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளின்போது, பிறிதொரு மாணவரை தாக்கிய குற்றச்சாட்டுக்காக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மூன்று மாணவர்களை கெகிராவை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாதாரண தரப் பரீட்சைக் காலங்களில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்தியைப் போன்று ஆள் மாறாட்டம் செய்த குற்றச்சாட்டுக்காக 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment