இரு கையெறிக் குண்டுகளுடன் ஒருவர் கைது - 7 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை விதிக்கும் சாத்தியம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

இரு கையெறிக் குண்டுகளுடன் ஒருவர் கைது - 7 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை விதிக்கும் சாத்தியம்

அம்பலாங்கொடை, பலபிட்டிய பகுதியில் இரு கையெறிக் குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கடந்த வாரம் ஒரு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகி, பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு சட்டவிரோத மற்றும் அழிவுகரமான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 7 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும் அவரை அம்பலாங்கொடை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad