பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு

போதைப் பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல் காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட விடயத்தில், பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் 13 அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேருக்கான விளக்கமறியில் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர்களை மார்ச் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் பாதாள உலக நபரான ‘போடி லாஸ்ஸி’ என்பவருக்கு சொந்தமான துப்பாக்கி தொடர்பான விவரங்களை கண்டறிந்துள்ளதாகவும் குற்றவியல் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கி தொடர்பான அரசு ஆய்வாளரிடமிருந்து அறிக்கை பெற சி.ஐ.டி.க்கு நீதிவான் அனுமதி வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad