யாழ் குருநகர் பகுதி தண்ணீர் தாங்கி வீதியில் உள்ள வீடோன்றில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 3 கிராம் தூய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை யாழ் மணியந்தோட்டம் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனைக்காக ஹெரோயின் போதைப் பொருளை கையிருப்பில் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்ட நபர்கள் 23, 21, 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ் குருநகர் பகுதியில் கடற்கரை வீதியில் விற்பனைக்காக வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 1 கிலோ 370 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரை கண்டதும் கஞ்சாவை தீயிட்டு கொழுத்த முற்பட்டவேளை குறித்த நபரை பொலிஸார் கைது செய்யதுடன் கஞ்சாவையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதிப் கப்புலியத்த தலைமையிலான பொலிஸார் நேற்றையதினம் மேற்கொண்டு சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment