(எம்.மனோசித்ரா)
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் இரணைதீவில் அடக்கம் செய்வதை ஆரம்பித்தாலும், புத்தளம், ஓட்டமாவடி மற்றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரணைதீவில் அடக்கம் செய்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலை ஏற்பட்டால் ஏனைய இடங்களில் அடக்கம் செய்வது தொடர்பில் தற்போது ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் நீர் நிலைகளில் பிரச்சினைகள் ஏற்படாத பகுதிகளை தெரிவு செய்யுமாறு முஸ்லிம் சமூகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment