ரஞ்சனின் எம்.பி. பதவி மனு மீதான தீர்ப்பு 5 ஆம் திகதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

ரஞ்சனின் எம்.பி. பதவி மனு மீதான தீர்ப்பு 5 ஆம் திகதி

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான உத்தரவை எதிர்வரும் 05 ஆம் திகதி பிறப்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது. எனினும், இதுவரை தீர்ப்பு தயாரிக்கப்படவில்லை என அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொரயா ஆகியோர் தீர்பிற்கான புதிய திகதியை இன்று அறிவித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad