நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட 19 கிளிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட 19 கிளிகள்

சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 19 கிளிகள் நீதிமன்ற பணிப்புரைக்கமைய விடுதலை செய்யப்பட்டதாக வனஜீவிகள் திணைக்கள அதிகாரி டீ.பி.சியா சிங்க நேற்று தெரிவித்தார்.

எஹலியகொடை பதுவத்த பிரதேசத்தில் பறவைகள் விற்பனை நிலையமொன்றை முற்றுகையிட்ட வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் 19 கிளிகளையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 19 கிளிகளும் காடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் பிடித்து வரப்பட்டவை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

இவை நெருக்கமான கூடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் வனஜீவிகள் திணைக்களப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற பணிப்புரைக்கமைய 19 கிளிகளும் விடுதலை செய்யப்பட்டதாக வனஜீவிகள் திணைக்களப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இரத்தினபுரி நிருபர்

No comments:

Post a Comment