19,800 லீட்டர் பெற்றோலுடன் சென்ற பவுஸர் விபத்து...! வரிசையில் நின்ற மக்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

19,800 லீட்டர் பெற்றோலுடன் சென்ற பவுஸர் விபத்து...! வரிசையில் நின்ற மக்கள்

திருகோணமலை - ஹபரணை பிரதான வீதியில் ஹபரணை - ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இன்று (25) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குறித்த பவுஸரில் 19,800 லீட்டர் பெற்றோல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பவுசர் விபத்துக்குள்ளானதால் எரிபொருள் கசியத் தொடங்கியதனையடுத்து எரிபொருள் வேறு வாகனத்திற்கு மாற்றியதாகவும் இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த எரிபொருள் தாங்கியில் இருந்து கசிந்த பெற்றோலை எடுப்பதற்கு வரிசையில் மக்கள் நின்றமை அவதானிக்க முடிந்தது.

விபத்தில் பவுஸரின் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை மற்றும் ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad