முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டாரவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டாரவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

காலஞ்சென்ற முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டாரவின் பூதவுடல், தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கமைய இன்று (15) மாலை கொட்டிகாவத்தையில் தகனம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார தனது 81ஆவது வயதில் நேற்று (14) காலமானார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அன்னார், சுதேச மருத்துவ அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

1989 ஆம் ஆண்டு கலாசார கல்வி மற்றும் தகவல் அமைச்சர் பதவி அன்னாருக்கு வழங்கப்பட்டது.

1994 முதல் 2001 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராகவும் 2004 முதல் 2010 வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் 16 ஆவது சபாநாயகராகவும் அன்னார் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை அரசியலில் சிறப்பிடம் பெற்றிருந்த அன்னார், நாட்டுப்பற்றுள்ள அரசியல்வாதியாக, கவிஞராக அனைவராலும் போற்றப்பட்ட ஒருவராவார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad