Tiles மற்றும் Ceramics இறக்குமதி வரையறை தொடர்ந்தும் அமுலில் - புதிய வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

Tiles மற்றும் Ceramics இறக்குமதி வரையறை தொடர்ந்தும் அமுலில் - புதிய வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு அறிவிப்பு

Tiles மற்றும் Ceramics உற்பத்திகளின் இறக்குமதியை தடுக்கும் வகையில் வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து நிதி அமைச்சர் நேற்று (02) வௌியிட்ட புதிய வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் இன்று அனைத்து வணிக வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, Tiles மற்றும் Ceramics உற்பத்திகளின் இறக்குமதிக்கான வரையறை தொடர்ந்தும் அமுலில் காணப்படும்.

பிரதமரினால் கைச்சாத்திடப்பட்ட வர்த்தமானியை அமுல்படுத்துவதற்கு முன்னரே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ்.கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமையவே வர்த்தமானியை அமுல்படுத்தாது, உடனடியாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் பிரகாரம், ஒரு சிலருக்கு ஏற்படக்கூடிய அசாதாரணங்களை கருத்திற்கொண்டு, வரையறைகள் தொடர்பில் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ்.கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment