நாடு முடக்கப்படும் என்பது வதந்தி என்கிறார் இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

நாடு முடக்கப்படும் என்பது வதந்தி என்கிறார் இராணுவத் தளபதி

கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டை முற்றாக முடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் குறித்த செய்தி உலா வருவதாகவும், அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பது தொடர்பில், அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளமை மற்றும் அதன் பரவல் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை, சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad