நாட்டின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றினை அனுபவித்திட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் இலங்கையின் 73வது சுதந்திர தினம் பெப்ரவரி 4ஆம் திகதி "செழிப்பான எதிர்காலம் சௌபாக்கியமான நாடு" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் தேதி நாம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டோம். இலங்கையர்களாகிய நாங்கள் அனைவரும் பெருமை மிகு சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்கு உரித்துடையவர்கள்.
உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ்வதற்கு பலமான பொருளாதாரம் மிக அவசியம். அந்த வகையில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தி தன்னிறைவு கொண்ட நாடாக எமது நாட்டினை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஊழலும், வறுமையும், கொடிய நோயும் ஒழிந்து நாட்டு மக்கள் அனைவரும் உண்மையான சுதந்திரக் காற்றினை எந்தவிதத் தடையும் இன்றி அனுபவித்திட வேண்டும். அந்த சுதந்திரக் காற்றினை அனுபவித்திட அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment