'யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள்' : சாணக்கியன் பகிரங்க அழைப்பு! - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

'யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள்' : சாணக்கியன் பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியின் நான்காம் நாள் பவனி இன்று காலை வவுனியாவில் இருந்து ஆரம்பித்து மன்னாருக்குச் சென்றது.

இந்நிலையில், மன்னார் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் வைத்து, கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும் மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad