இஸ்ரேலுடன் கொசோவோ இராஜதந்திர ஒப்பந்தம் : ஜெரூசலத்தில் தூதரகம் திறக்கவும் சம்மதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

இஸ்ரேலுடன் கொசோவோ இராஜதந்திர ஒப்பந்தம் : ஜெரூசலத்தில் தூதரகம் திறக்கவும் சம்மதம்

முஸ்லிம் பெரும்பான்மை நாடான கொசோவோ இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி உள்ளதோடு ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்துள்ளது.

ஒன்லைன் வழியாக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கபி அஷ்கனாசி மற்றும் கொசோவோ வெளியுறவு அமைச்சர் மெலிசா ஹரடினாஜ் ஸ்டுப்லே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ஜெரூசலத்தில் கொசோவோ தூதரகத்தை திறப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அஷ்கனாசி இதன்போது தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மத்தியஸ்தத்தில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், மொரோக்கோ மற்றும் சூடான் உடன் இஸ்ரேல் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது. 

இதில் அமெரிக்கா மற்றும் குவாந்தமாலாவுக்கு அடுத்து ஜெரூசலத்தில் தூதரகம் திறக்கும் மூன்றாவது நாடாக கொசோவோ பதிவாகவுள்ளது.

மத்திய கிழக்கு பிராச்சினையில் பிரதான அம்சங்களில் ஒன்றாக ஜெரூசலம் உள்ளது. 1967 இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலம் தமது எதிர்கால தலைநகர் என்று பலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment