(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கைக்கு சீனா வழங்கும் யுவானால் வேறு பிரச்சினை தோற்றம் பெறும். இதனால் சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அரசாங்கம் கடும் சவால்களையே காண்கின்றது.
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலும் 1500 யுவான்களை வழங்கவே சீனா முன்வந்துள்ளது. சீன யுவான்களை இலங்கை பெற்றுக் கொண்டாலும் டொலரிலேயே மீள் செலுத்த வேண்டும்.
இதன்போது திறைசேரியின் இருப்பு வீதம் அதிக புள்ளியில் காணப்பட்டாலும் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி இருப்பாக இலங்கையிடம் காணப்படாது. இதனால் சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
அதற்கும் தற்போதுள்ள சீன பொருட்களுக்கான கொள்வனவு கட்டுப்பாட்டை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் ஏனைய நாடுகளுடனான பொருளாதார கொள்கைகளிலும் உறவுகளிலும் பாதுப்பு ஏற்படும். இது நிச்சயம் வேறு ஒரு பிரச்சினையை உருவாக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
கொழும்பு-3, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் கட்சி உறுப்பினர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment