விண்வெளி நீதிமன்றத்தை உருவாக்கியது துபாய் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 4, 2021

விண்வெளி நீதிமன்றத்தை உருவாக்கியது துபாய்

விண்வெளியில் ஏற்படக்கூடிய வர்த்தக ரீதியான பிரச்சினைகளைச் சமாளிக்க துபாய் விண்வெளி நீதிமன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அது துபாய் சர்வதேச நிதி நிலையத்தில் அமைந்திருக்கும்.

விண்வெளிச் சட்டம், சர்வதேச மாநாடுகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டு இந்த நீதிமன்றம் இயங்கவுள்ளது.

நாடுகள், கழகங்கள் ஆகியவற்றின் களமாக மட்டும் இருந்த விண்வெளியில் அண்மையில் அதிகமான தனியார் நிறுவனங்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளன. 

புதிய விண்வெளி நீதிமன்றம், விண்வெளியில் எழக்கூடிய வர்த்தகத் தேவைகளை ஈடுகட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு இராச்சியங்கள் அண்மைய ஆண்டுகளாக விண்வெளித் துறையில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. 

அது கடந்த ஆண்டு ஹோப் என்னும் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அந்த விண்கலம் அடுத்த வாரம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment