காத்தான்குடியை விடுவிப்பதற்கு சிபாரிசு செய்தார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

காத்தான்குடியை விடுவிப்பதற்கு சிபாரிசு செய்தார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பத்து கிராம சேவகர் பிரிவுகளையும் விடுவிப்பதற்கான சிபாரிசை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு இன்று (6) பிற்பகல் பரிந்துரை செய்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என். மயூரன் சற்றுமுன் தெரிவித்தார்

டாக்டர் மயூரன் சற்றுமுன் காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் அவர்களை தொடர்புகொண்டு இதனை கூறினார்.

இன்று பிற்பகல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை தான் தொடர்புகொண்டு காத்தான்குடி நிலவரம் தொடர்பாக கேட்டபோது தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் சற்று முன் சிபாரிசு செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இனி தேசிய கொவிட் தடுப்பு செயலணியிடமிருந்து விடுவிப்பு தொடர்பான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக உழைத்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் உட்பட அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் மட்டு மாவட்ட அரச அதிபருக்கும் ஏனைய உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad