அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, February 21, 2021

அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்கு சுமார் 6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. எனினும் கடனை மீள செலுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிக் கொண்டு அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது. இவ்வாறு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்கு மாத்திரம் 6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இதனை செலுத்துவதில் சிக்கல் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறு சொல்வது பொறுத்தமற்றது. இந்த கடனை செலுத்துவதற்கான நிதி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியாகும் போது மத்திய வங்கியில் 5.6 பில்லியன் டொலர் மாத்திரமே காணப்பட்டது. அதேபோன்று ஜனவரி 31 ஆம் திகதியாகும் போது 4.8 பில்லியன் டொலர் மாத்திரமே காணப்பட்டது. அதற்கமைய ஜனவரி மாத்தில் மாத்திரம் 900 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி 400 மில்லியன் டொலர்களை இந்தியாவிற்கு செலுத்த வேண்டியிருந்தது. செலவுகனைத்தும் போது இலங்கையிடம் ஒரு பில்லியன் டொலர் மாத்திரமே எஞ்சியுள்ளது.

தங்கம் 400 மில்லியன் டொலர் பெறுமதியானவை மாத்திரமே உள்ளன. இவ்வாறான நிலைமையிலேயே அரசாங்கத்திற்கு மாத்திரம் 6 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தை விடுத்து தனியார் துறையினருக்கும் சுமார் 1.5 பில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது. எனவே கடனை மீள செலுத்துவதில் பிரச்சினை இல்லை என்று பொய் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது.

இந்தியாவிலிருந்து 1 பில்லியன் டொலர் முதலீடு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களிடம் பெற்றுக்கொண்ட 400 மில்லியன் டொலர்களையே அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாமல் போயுள்ள நிலையில் எவ்வாறு முதலீட்டை பெற்றுக் கொள்ள முடியும் ? இவ்வாறு பொய் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.

இதே நிலைமை தொடருமானால் அடுத்த ஓரிரு மாதங்களில் வாழ்வதற்கான டொலர்களும் கையை விட்டு நீங்கிவிடும். இதனால் 210 இலட்சம் மக்களே பாதிக்கப்படுவர். காரணம் அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமிடலும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment