கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட இந்திய துணை உயர்ஸ்தானிகர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட இந்திய துணை உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான துணை இந்திய உயர்ஸ்தானிகர் வினோத்.கே.ஜேக்கப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்புக்கள் கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் வலியுறுத்தியிருந்தார்.

பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.

மாகாண சபை மற்றும் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழி அர்த்தப்புஷ்டியான பரவலாக்கம் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதனை பிரதி உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment