வடக்கில் கல்வித்துறையை மேம்படுத்த அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம் - தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை என்கிறார் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

வடக்கில் கல்வித்துறையை மேம்படுத்த அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம் - தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை என்கிறார் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையை மேம்படுத்த அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியமானதாகும். தேவைகளை கண்டறிந்து அவற்றிக்கு முன்னுரிமை வழங்கி கல்வித்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நல்லிணக்கத்தை பாடசாலை மட்டத்தில் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

யாழ். நயினை நாகபூசனி அம்மன் கோயிலில் வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

48 வருட காலத்திற்கு மேல் நாகதீப விகாரையில் சிறப்பான முறையில் சேவையாற்றும் மதகுருமார்கள் கௌரவிக்கப்பட வேண்டும். வடக்கு வாழ் மக்களின் சுகாதாரம், கல்வி, மற்றும் பொருளாதாரம், வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசியல் காரணிகளுக்கு அப்பால் பொது கொள்கையில் இருந்து செயற்படுவது அவசியமாகும்.

கல்வி, விவசாயம் மற்றும் மீன்பிடிக் கைத்தொழில் ஆகிய துறைகளில் வடக்கு மக்களை முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்பது குறித்து யாழ். கர்தினால் ஆண்டகையுடனான சந்திப்பின் போது பேசப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி சேவை அதிகாரிகளையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இனங்களுக்குடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவது அவசியமாகும்.

அதற்காக வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை ஒன்றினைக்கும் செயற்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment