பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பம் கோரல் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 25, 2021

பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பம் கோரல்

நுவரெலியா இந்து கலாசார பேரவையின் 30ஆவது வருட நிறைவு முத்து விழா நிகழ்வின் ஒரு அங்கமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகளுக்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இந்து கலாசார பேரவையின் தலைவர் இரா. பாலகிருஸ்ணன் தலைமையில் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நுவரெலியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வுகள் நடைபெறும்.

பேரவையின் தலைவர் இரா. பாலகிருஸ்ணனின் முயற்சியால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கும், வறுமை கோட்டின் கீழ் வாழும் மாணவ மாணவிகளுக்கும் இந்தப் புலமைப்பரிசில் நிதி வழங்கப்படும்.

விசேடமாக நுவரெலியா இந்து கலாசாரப் பேரவையின் ஸ்ரீ விவேகானந்த அறநெறி பாடசாலையில் கல்வி கற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

புலமைப்பரிசில் பெற தகுதியுடையவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், நுவரெலியா இந்து கலாசாரப் பேரவை, இலக்கம் 30, கண்டி வீதி, நுவரெலியா. என்ற முகவரிக்கு முழு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெறும். இது தொடர்பாக மேலதிக விபரங்களை 0773179138 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

(நுவரெலியா தினகரன் நிருபர்)

No comments:

Post a Comment