ரூபா 39 இலட்சம் நிதி மோசடி செய்தமை தொடர்பான வழக்கிலிருந்து, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்திற்குரிய ரூபா 39 இலட்சம் நிதியை முறைகேடான வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவரை நிரபராதி என விடுதலை செய்வதாக, கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
பிரதிவாதிக்கு எதிராக, முறைப்பாட்டாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என முடிவுக்கு வந்த நீதவான், பிரதிவாதியான அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை, குறித்த குற்றச்சாட்டுகள் மூன்றிலிருந்தும் நிரபராதி என விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment