யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கஞ்சா கடத்திய இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கஞ்சா கடத்திய இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகளை கடத்திச் செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு - தெமட்டகொடவுக்கு கடத்த முயன்ற சந்தேக நபர்கள் இருவரும் விஷேட அதிரடிப் படையினரால் நேற்று (05.02.2021) ஈரப்பெரிய குளம் குருந்துபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெப்பத்திகொல்லாவ விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் காரினுள் பொதி செய்து வைத்திருந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா ஈரப்பெரிய குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 43, 48 வயதுக்குட்பட்ட தெமட்டகாெடவில் வசிப்பவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad