நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்படுத்தப்படும்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த (26.01.2021) ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய ஒரு வார காலத்திற்குள் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் கலந்துரையாடி வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களை விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் பணிபுரியும் ஏராளமான இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாது பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
அதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதுவரை வெளிநாட்டில் பணிபுரியும் 32000 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 22483 பேர் தாய்நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
No comments:
Post a Comment