இரு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டி, தானும் நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் விழுந்து கிடந்த தாய் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

இரு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டி, தானும் நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் விழுந்து கிடந்த தாய்

தம்புள்ளை, யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நச்சூட்டி தானும் நஞ்சருத்திய சம்பவம் ஒன்று நேற்று (15.02.2021) பதிவாகியுள்ளது.

தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாகவே, குறித்த தாய் தனது ஒன்று மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார். 

இந்நிலையில், தாயும் இரண்டு குழந்தைகளும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான வீதியோரத்தில் இவர்கள் கீழே விழுந்த நிலையில் காணப்பட்ட போது பிரதேச வாசிகள் கண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேலும், இரு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், குறித்த யுவதியின் கணவன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் செய்பவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad