தனது நாட்டு குடிமக்கள் 13 பேர் ஈராக்கில் கொடூரமாக கொலை - கடும் கண்டனத்தை தெரிவித்தது தருக்கி - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

தனது நாட்டு குடிமக்கள் 13 பேர் ஈராக்கில் கொடூரமாக கொலை - கடும் கண்டனத்தை தெரிவித்தது தருக்கி

வடக்கு ஈராக்கின் காரா பகுதியில் பி.கே.கே பயங்கரவாதக் குழுவால் 13 துருக்கிய குடிமக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டமைக்கு துருக்கி திங்களன்று கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளன.

துருக்கி குடியரசின் ஜனாதிபதி, ரெசெப் தயிப் எர்டோகன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் முழு துருக்கிய மக்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடக்கு ஈராக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது துருக்கிய குடிமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

துருக்கி மீது எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தப்படும் நிலைகளை மீண்டும் நிறுவுவதை பி.கே.கே மற்றும் பிற பயங்கரவாத குழுக்கள் தடுக்க துருக்கி படைகள் க்ளா-ஈகிள் 2 என்ற விசேட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.

மக்கள் மற்றும் துருக்கியின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக க்ளா-டைகர் மற்றும் க்ளா-ஈகிள் ஆகிய நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டன.

துருக்கிக்கு எதிரான 30 ஆண்டுகளுக்கும் மேலான பயங்கரவாத பிரச்சாரத்தில், துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட பி.கே.கே. என்ற பயங்கரவாத குழு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40,000 பேரின் மரணங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad