நாய் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

நாய் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி

தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவரால் ரேபிஸ் நோய் கொண்ட நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் சூடு அருகில் இருந்த நபரொருவர் மீது பட்டதில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நாய் பிரதேசத்தை சேர்ந்த சுமார் 10க்கும் அதிகமானோரை கடித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

அதன்படி, இன்று (27) காலை 10.30 மணியளவில் ரேபிஸ் நோய் தொற்று கொண்ட நாய் தெற்கு களுத்துறை, வெட்டுமகட பிரதேசத்தில் உள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக குறித்த பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது, உப பொலிஸ் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நாய் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர், அங்கிருந்த நபரொருவர் மீதும் துப்பாக்கிச் சூடு தவறுதலாக பட்டதை தொடர்ந்து 60 வயதுடைய காயமடைந்த நபர் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment