தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் வீட்டில் யாருமற்ற நிலையில் அவரது தங்கையுடன் குறித்த சிறுமி இருந்துள்ளார். 

இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கியிருப்பதை அவதானித்த அவரது தங்கை அயலவர்களிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கற்குழி பகுதியை சேர்ந்த சதுசியா வயது 16 என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அவர் எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad