ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவிற்கான நியமனங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விசேட குழுவை நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நியமித்துள்ளார்.
இவ் அதிஉயர் குழுவில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக உள்வாங்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமானுக்கான நியமனத்தை நீதியமைச்சர் அலி சப்ரி வழங்கியுள்ளார்.
இலங்கையை பொருத்த வரையில், தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
பல்லினச் சமூகங்களைக் கொண்ட மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால், தேசிய நல்லிணக்கமும், தேசிய ஒருமைப்பாடுமே அந்த நாடுகளை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றுள்ளன.
இதற்கமையவே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தக் குழுவை நியமிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.
அத்துடன், இந்தக் குழுவின் அங்கத்தவர்களாக உயர்நிலை பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment