ரணில் பொறுப்பற்று செயற்பட்டதால் இன்று இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன - அமைச்சர் தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

ரணில் பொறுப்பற்று செயற்பட்டதால் இன்று இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன - அமைச்சர் தயாசிறி ஜயசேகர

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூகோளிய அரசியல் தொடர்பில் கருத்துரைக்கும் தார்மீக உரிமை கிடையாது. கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு இவர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதன் காரணத்தால் இன்று இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன என பத்திக், கைத்தரி துணிகள் மற்றம் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் 2015ஆம் ஆண்டு சர்வதேசத்தில் துறைமுக கட்டுமாண நிர்மாணத் துறையில் முன்னணி வகித்த 7 நாடுகளுக்கிடையில் விலைமனு கோரல் விடுக்கப்பட்டது. 7 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலைமனு கோரல் பல்வேறு காரணிகளினால் 3 தடவை மாற்றியமைக்கப்பட்டது.

இறுதியில் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பற்ற வகையில் செயப்பட்டதன் காரணமாக இந்தியாவுடன் தற்போது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து கிழக்கு முனையத்தை பாதுகாத்துள்ளோம். மேல் முனையத்தை அரசாங்கம் தாரைவார்த்து விட்டதாக எதிர்தரப்பினர் குறிப்பிடும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையமே பிரதானமானது என்றார்.

No comments:

Post a Comment