அரவிந்த டி சில்வா தலைமையில் நால்வர் அடங்கிய கிரிக்கெட் குழு நியமனம் - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

அரவிந்த டி சில்வா தலைமையில் நால்வர் அடங்கிய கிரிக்கெட் குழு நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால், முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தலைமையில் 'கிரிக்கெட் குழு' ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலேசானைக்கமைய குறித்த நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகளை எடுப்பது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து இக்குழு செயற்படும் என, கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த குழுவின் அங்கத்தவர்கள்

அரவிந்த டி சில்வா - தலைவர்
(முன்னாள் கிரிக்கெட் வீரர்)

ரொஷான் மஹானாம
முன்னாள் கிரிக்கெட் போட்டி நடுவர்

முத்தையா முரளிதரன்
(அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியவர்)

குமார் சங்கக்கார
(நட்சத்திர விக்கெட்காப்பாளர்/ துடுப்பாட்ட வீரர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad