மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் இறப்பர் தோட்டா பிரயோகம் - ஆபத்தான நிலையில் காயமடைந்த பெண் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் இறப்பர் தோட்டா பிரயோகம் - ஆபத்தான நிலையில் காயமடைந்த பெண்

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவில் தலைவர் ஆங் சான் சூகியின் கட்சித் தலைமையகத்தில் மியன்மார் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.

மியன்மாரின் முக்கிய நகரங்களில் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்தபோது, ஒரு இரவு நேர சோதனையில், இராணுவமும் காவல்துறையும் யாங்கோனில் உள்ள தேசிய ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (என்.எல்.டி) தலைமையகம் மற்றும் அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்திற்குள் நுழைந்தாக கட்சியின் ஆராய்ச்சி உறுப்பினரான க்யாவ் வுன்னா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை மியான்மரின் முக்கிய நகரங்களில் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்தபோது இறப்பர் தோட்டா சூட்டுப் பிரயோகங்கள், நீர்ப் பிரயோகங்கள் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்கள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைநகரான நெய் பை தவ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இறப்பர் சூட்டு காயத்துக்குள்ளான பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

அந்த பெண்ணின் தலையில் இறப்பர் தோட்டா சூடு மேற்கொள்ளப்பட்டதாக உரிமைக் குழுக்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸார் தங்கள் சக்தியைப் பயன்படுத்துவதை அதிகரித்துள்ளதால் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன, ஆனால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad