புதிய சட்டம் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய ஜப்பான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

புதிய சட்டம் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய ஜப்பான்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி மக்களை சென்றடையும் நிலையில், புதிய சட்டம் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளை ஜப்பான் அரசு கடுமையாக்கியுள்ளது.

ஜப்பானில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் அவரசநிலையை அந்நாட்டு பிரதமர் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பின், அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு தெரிவித்தால் 5 லட்சம் யென் (4,800 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கப்படும்.

பார்கள், ரெஸ்டாரன்ட்களை இரவு 8 மணியுடன் மூடியிட வேண்டும். அதை மீறி செயல்பட்டால், 3 லட்சம் செயன் அபராதமாக செலுத்த வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மக்கள் பழகுவதற்காக 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். அதன்பின் கடுமையான வகையில் கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment