நாம் இலங்கையர் என்ற உணர்வை என்றும் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும் - ஓட்டமாவடியில் நடைபெற்ற சுதந்திர தினம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

நாம் இலங்கையர் என்ற உணர்வை என்றும் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும் - ஓட்டமாவடியில் நடைபெற்ற சுதந்திர தினம்

ஓட்டமாவடி நிருபர்

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிகழ்வு ஏ.விஸன் அமைப்பின் ஏற்பாட்டிலும் பிட்னஸ் டைம் ஜிம் அமைப்பின் பங்குபற்றுபற்றுதல்களுடன் இன்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

இத்தேசிய தின நிகழ்வுகள் ஏ.விஸன் அமைப்பின் தலைவர் எம். ஜனாபிர் தலைமையில் நடைபெற்றது.

தேசிய கொடியினை மௌலவி ஆசிரியர் எம்.எம் நளீம்ஏற்றியதுடன் தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கான மரியாதைகளும் செலுத்தப்பட்டது.

அங்கு விருந்தினர்களில் ஒருவராக பங்குபற்றிய மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளும் ஆசிரியருமாகிய முஹம்மது சதீக் உரையாற்றுகையில் இந்த நாட்டிலுள்ள நாம் இலங்கையர் என்ற உணர்வை என்றும் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும் என்றும் இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் தேசிய உணர்வு நாட்டுப்பற்று தானாக உருவாக வேண்டும என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த தேசியத்தில் பீடித்திருக்கும் இன உரசல்கள் கலையப்பட வேண்டும். இளைஞர்கள் வன்முறைக்குள் செல்வதனை தவிர்த்து இத்தேசியத்தின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் கூறினார். 

இந்த சுதந்திர தின நிகழ்வுக்கு எழுச்சி மற்றும் ஈஸ்ட்மிரர் ஊடக அமைப்புகள் அனுசரனையை வழங்கியிருந்தனர்.

No comments:

Post a Comment