அமெரிக்காவில் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகில் கொரோனாவால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பைசர் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மருந்தையும் அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம், ஜோன்சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது.
அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்பும் பணி நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சுமார் 4 மில்லியன் டோஸ் மருந்துகள் வர உள்ளன. மார்ச் இறுதிக்குள் 20 மில்லியன் டோஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தடுப்பூசி மருந்துகளை இரண்டு முறை செலுத்த வேண்டும். ஆனால், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் மருந்தை ஒரு முறை செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment