300 மில்லியன் பெறுமதியான கொட்டைப் பாக்குகளை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய முனைந்த நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 10, 2021

300 மில்லியன் பெறுமதியான கொட்டைப் பாக்குகளை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய முனைந்த நபர் கைது

300 மில்லியன் பெறுமதியான கொட்டைப் பாக்குகளை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்வதற்கு முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை குற்றத் தடுப்பு திணைக்கள பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மேற்படி 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொட்டைப் பாக்கு உரிய சட்ட ரீதியான பின்பற்றல் இன்றி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முயற்சித்த போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேவேளை சுங்க தீர்வை வரி செலுத்தாமல் அதனை செலுத்தியுள்ளதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான காகோ நிறுவனத்தில் இருந்து பொருட்களை விடுவித்து சென்றுள்ள குற்றத்திற்காக வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment