வரலாற்றில் முதல் தடவையாக 28 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு நிவாரணப் பொதி : சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனையகங்களில் கொள்வனவு செய்யலாம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

வரலாற்றில் முதல் தடவையாக 28 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு நிவாரணப் பொதி : சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனையகங்களில் கொள்வனவு செய்யலாம்

வரலாற்றில் முதல் தடவையாக 28 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணப் பொதி விநியோகிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 28 வகை பொருட்களை கொள்வனவு செய்யலாம். 

லங்கா சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனையகங்கள் ஊடாக நிவாரணப் பொதியைக் கொள்வனவு செய்ய முடியும். 

இந்தத் திட்டம் வணிக அமைச்சின் முழுமையாக கண்காணிப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் 3 மாதங்கள் அமுலாக்கப்படும். 

இதற்காக, தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நேரடி இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நிலையான விலை மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்று வணிக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

இதன் மூலம் தரத்தில் சிறந்த அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் உள்ள மட்டத்தை விட குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு வழங்கக்கூடிய ஆற்றல் உருவதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார். 

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் ஒன்றாகும். இந்தத் திட்டத்திற்கு அரச நிறுவனங்களைப் போன்று தனியார் துறையும் உதவி வழங்க முன்வந்திருப்பது சிறப்பானது என்றும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment