பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 25 சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 25 சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 25 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் மினுவாங்கொட பகுதியில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது பல்வேறு குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு 15 பேரை கைது செய்துள்ள பொலிசார் அவர்களிடமிருந்து 91 லீட்டர் சட்டவிரோத மதுபானத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 7 சந்தேக நபர்களும், போதைப் பொருட்களை வைத்திருந்தமை, துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் வேறு குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் தலா ஒருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொட பொலிசார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை இது போன்ற குற்றச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால், அதுத் தொடர்பில் 119, 118 மற்றும் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு பொதுமக்கள் பொலிஸாருக்க தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தென் பகுதி நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad