உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம் மீளப்பெறப்பட்டு தகனம் - PCR முடிவால் இறுதி நேரத்தில் மாற்றம் - 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Friday, January 22, 2021

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம் மீளப்பெறப்பட்டு தகனம் - PCR முடிவால் இறுதி நேரத்தில் மாற்றம் - 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

குருநாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் அடக்கம் செய்ய உறவினர்களும் தயாராகியுள்ளனர். 

இதன்போது அவரது சடலம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டதால் மீண்டும் சடலம் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன் சடலத்தை தகனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் மல்சிரிபுர, நீரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளளார். பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் காலை அறிக்கை கிடைத்த பின்னரே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அதன் பின்னர் சடலத்தை தகனம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சடலத்தை பொறுப்பேற்கச் சென்ற சுகாதார அதிகாரிகளுக்கும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகராறின் பின்னர் சடலம் தகனம் செய்யப்பட்டதுடன் 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad