வைத்தியர்களையும் விட்டு வைக்காத கொரோனா 100 பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 22, 2021

வைத்தியர்களையும் விட்டு வைக்காத கொரோனா 100 பேர் பாதிப்பு

இதுவரையில் சுமார் 100 மருத்துவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது 40 மருத்துவர்களிற்கு வெவ்வேறு பகுதிகளில் சிகிச்சை வழங்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளின் போது சுகாதார பணியாளர்களிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார பணியாளர்கள் முன்னிலை பணியாளர்களாக கடமையாற்றுவதன் காரணமாகவும் கொரோனா வைரசினை நேரடியாக கையாள்வதன் காரணமாகவும் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்தால் கொரோனா வைரசினை தோற்கடிக்க முடியாத நிலையேற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் ஆபத்துள்ளதால் அவர்களை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அதிகளவு மருத்துவர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டால் அதன் காரணமாக புதிய கொத்தணி உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment